சம்மரில் ஏ.சி வின்டரில் ஹீட்டர்... சட்டையிலும் மாட்டிக் கொள்ளலாம்! சோனியின் சூப்பர் கண்டுபிடிப்பு

0 2625

கோடைக்காலத்தில் கொளுத்தும் வெயிலுக்குப் பயந்து காலை எட்டு மணிக்கே அலுவலகத்துக்குச் சென்று ஏசியில் அமர்ந்துகொள்பவர்கள் ஏராளம். வெயிலிலும், போக்குவரத்து நெரிசலிலும் சிக்கி சின்னாபின்னமாகும் சென்னை வாசிகளுக்கு ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது.

சோனி நிறுவனத்தின்  சட்டையில் அணியக்கூடிய குளிர் சாதனமான 'ரியோன் பாக்கெட்' விற்பனைக்கு வந்துவிட்டது. ரியோன் பாக்கெட்டை முதுகுப் பக்கத்தில் அணிந்துகொண்டு வெயிலைப் பற்றிக் கவலைப்படாமல் ஹாயாக இனி சென்று வரலாம்.

சோனியின் ரியோன் பாக்கெட்டின் விலை ஜப்பானிய மதிப்பில் 13,000 யென் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 9,000 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஜப்பானில் மட்டும் அமேசான் மற்றும் சோனி நிறுவன இணையதளம் மூலம் ரியோன் பாக்கெட் குளிர் சாதனம் விற்கப்படுகிறது.

image

ரியோன் பாக்கெட் பார்ப்பதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் மேஜிக் மவுசைப் போன்றே உள்ளங்கையில் அடங்கும் விதத்தில் உள்ளது. இதை எங்கு வேண்டும் என்றாலும் பாக்கெட்டில் எடுத்துச் செல்லலாம். டி - ஷர்டில் பின்பக்கத்தில் எளிதாக மாட்டிக் கொள்ளலாம். ரியோ பாக்கெட்டிலுள்ள  சிறிய மின் விசிறி உடலில் உள்ள வெப்பத்தை உறிஞ்சி வெளிப்பக்கமாகத் தள்ளுகிறது. கூகுளின் ஆன்டிராய்டு மற்றும் ஆப்பிளின்  ஐஓஎஸ்  செயலிகள் மூலம் கட்டுப்படுத்தி பாக்கெட் ரியோனின் வெப்பநிலையை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்.

தானியங்கியாக, சுற்றுப்புற மற்றும் உடல் வெப்பநிலையைக் கண்டறிந்து தானாகவே செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டிலிருந்து நான்கு மணி நேரம் வரை தாங்கும் என்று சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. இது கோடைக்காலத்தில் குளிர் சாதனமாகப் பயன்படுவதைப் போன்றே குளிர்காலத்தில் வெப்பச் சாதனமாகவும் பயன்படுகிறது. விரைவில் இந்தியாவிலும் இந்த ரியோன் பாக்கெட் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments