அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள்..இதுவரை 3 சேனல்கள் ஒப்புதல்..!

0 3679

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாக வகுப்புகள் நடத்தப்படும் எனவும், அதற்கு 3 சேனல்கள் இதுவரை ஒப்புதல் தெரிவித்திருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோப்பிச்செட்டிப்பாளையம் அடுத்த நம்பியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், முதலமைச்சர் தொடங்கி வைத்த பின் வகுப்புகள் குறித்த முழு விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றார்.

மேலும் பிளஸ் - 2 தேர்வெழுதாமல் விடுப்பட்ட மாணவர்களுக்கான தேர்வை 718 பேர் எழுத விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், மீதமுள்ளவர்களின் நிலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தேர்வு எழுதினால் தானே மார்க் போட முடியும் என்றார். மேலும் விடுப்பட்ட 34,842 மாணவர்களும் தேர்வெழுத வந்தாலும், தேர்வெழுத ஏற்பாடுகள் செய்து தர அரசு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments