அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 30 லட்சத்தைத் தாண்டியது

0 1206

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கொல்லுயிரியின் கொலைக்களமாக மாறிப்போன அந்நாட்டில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் குறைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது 4வது நாளாக பெருந்தொற்றுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 51 ஆயிரம் பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 48 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 750க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 34 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சிகிச்சை முடிந்து திரும்பியிருந்தாலும், இன்னும் 16 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 15 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments