பழம்பெரும் நகைச்சுவை நடிகர் ஜக்தீப் காலமானார்

0 1744

பழம்பெரும் பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜக்தீப் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 81. ஷோலே, அந்தாஸ், புரானா மந்திர் போன்ற நூற்றுக்கணக்கான படங்களில் ஜக்தீப் திக்கி திக்கிப் பேசியபடி நடித்த காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்தன. பேதலித்த பேச்சு பாணியால் கலகலப்பை ஊட்டிய திறமையான நடிகர் ஜக்தீப். ஷோலேயில் இவரது சூர்மா போபாலி பாத்திரம் வெகுவாக பேசப்பட்டது.

வயது மூப்பின் காரணமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஜகதீப் தமது இல்லத்தில் காலமானதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர். ஜக்தீப்பின் இரு மகன்களில் மூத்தவரான ஜாவேத் ஜாப்ரியும் பிரபலமான நகைச்சுவை நடிகராவார். இரண்டாவது மகன் நவீத் ஜாப்ரி தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருக்கிறார். ஜக்தீப் மறைவுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments