நீலகிரியில் சங்கிலி தொடர் போல் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 1368
கொரோனாவை தடுக்க 20 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் தொழிற்சாலை ஊழியருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால், சங்கிலி தொடர் போல் 39 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.

எல்லநல்லி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊசி தயாரிக்கும் தொழிற்சாலையில் 855 பேர் பணிபுரிகின்றனர். அங்கு மக்கள் தொடர்பு அலுவலராக வேலை செய்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, உடனடியாக தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் அவர் மூலம் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 39 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் உடனடியாக உதகை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு தனிமை படுத்தப்பட்டனர்.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி இருந்த 20 கிராமங்கள் தனிமை படுத்தப்பட்டு கிறுமிநாசினி நாசினி தெளிக்கப்பட்டு, அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 150 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 41 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments