பாக்.ராணுவம் துப்பாக்கிச் சூடு-எல்லையோர கிராமத்தில் மூதாட்டி குண்டு பாய்ந்து உயிரிழப்பு

0 876

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாலக்கோட் மற்றும் மெந்தார் செக்டர்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த தாக்குதலில் மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர். எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் முன்னறிவிப்பின்றி ராக்கெட் குண்டுகளை வீசியதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

இந்திய வீரர்கள் கடுமையாக பதிலடி தந்ததால் சுமார் ஒருமணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments