சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா

0 2676

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு, எஸ்.பி.சி.ஐடி காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மாவட்ட கண்காணிப்பாளர் ரோஹித்நாதன் ராஜகோபாலுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த எஸ்.பிக்கு பரிசோதனைகளை செய்த மருத்துவர்கள், தொற்று ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொள்ள அறிவுறுத்தினர்.

இதையடுத்து மேலூர் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் எஸ்.பி ரோஹித்நாதன் ராஜகோபால் தனிமைபடுத்தப்பட்டுள்ளார். அவருடன் பணிபுரிந்த மற்ற காவல்துறையினரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எஸ்.பி சொந்த காரணங்களுக்காக அவ்வப்போது மதுரைக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments