2020ம் ஆண்டு ஐபிஎல் போட்டியை நடத்த நியூசிலாந்து விருப்பம்

0 3455

ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை நாடுகளைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு நியூசிலாந்து நாடும் முன்வந்துள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக  ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டி, எப்போது நடத்தப்படும் என்பது தெரியாமல் உள்ளது. இந்தியாவில் நடத்த முடியாத நிலை நேரிடும்பட்சத்தில்,  ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகியவை தங்கள் நாட்டில் நடத்த ஆர்வம் தெரிவித்தன.

இதையடுத்து நியூசிலாந்தும் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை தெரிவித்த கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய மூத்த அதிகாரி, இந்தியாவில் நடத்த முடியவில்லை என்றால்தான் மற்ற நாடுகளில் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

விரைவில் இதுகுறித்தும், சீனாவின் வைவோ (vivo) ஸ்பான்சர்சிப் குறித்தும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments