சீனா தலைநகர் பெய்ஜிங்கில் முதன்முறையாக ஜீரோ பாதிப்பு பதிவு

0 1594
அறிகுறியற்ற ஒருவருக்கு மட்டும் கொரோனா என அதிகாரிகள் தகவல்

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், முதன்முறையாக ஜீரோ பாதிப்பு பதிவாகி உள்ளது.

பெய்ஜிங்கின் ஜின்ஃபாடி சந்தையை மையமாக கொண்டு கடந்த மாதம் முதல் கொத்து கொத்தாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வந்தது. அந்த வகையில் 335 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நகரம் முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு பரிசோதனைகள் விரிவுப்படுத்தப்பட்டது.

நகர மக்கள் தொகையில் பாதி அதாவது ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இன்று அறிகுறியற்ற ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் இது உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் சேர்க்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments