புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை - வீரர் ஒருவர் வீரமரணம்

0 966
துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார்.

புல்வாமாவின் கோசு ((Goosu area )) பகுதியில் ரகசியத் தகவலின்பேரில் அதிகாலை 5.30 மணிக்கு தேடுதல் வேட்டை நடத்தியபோது வீட்டுக்குள் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகளுடன் சண்டை மூண்டது.

இதில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். போலீசார் ஒருவரும், பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் என மொத்தம் 2 பேர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். வீட்டில் பதுங்கியிருக்கும் இன்னொரு பயங்கரவாதி, தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் துப்பாக்கிச் சண்டை நீடிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments