சீன விவகாரத்தில் மக்கள் நம்பிக்கையை இழக்கும் விதமாக ராகுல் பேசுகிறார் - ஜேபி.நட்டா குற்றச்சாட்டு

0 2427

பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் ஒரு முறை கூட பங்கேற்காத ராகுல் காந்தி, சீன விவகாரத்தில் நாட்டுமக்களிடம் நம்பிக்கையின்மையை தூண்டும் வகையில் பேசுவதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.

டுவிட்டர் பதிவில் இவ்வாறு கூறியுள்ள அவர், நமது ராணுவ வீரர்களின் வீரத்தையும் ராகுல் காந்தி கேள்வி கேட்பதாக குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி வம்சாவளி அரசியலை நடத்துவதால், திறமையான பல தலைவர்கள் இருந்தும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் நட்டா கூறியுள்ளார்.

மக்களவை இணையதளத்தின் படி, ராகுல் காந்தி இது வரை நாடாளுமன்றத்தின் எந்த நிலைக்குழு கூட்டத்திலும் இதுவரை பங்கேற்கவில்லை என்பது தெளிவாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments