ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பைப் லைன் அமைக்கப்படுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்

0 1353

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள 3 அடுக்குமாடி கட்டிடங்களிலும் ஆக்சிஜன் பைப் லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், 43 மூத்த மருத்துவ துறை தலைவர்கள் கலந்து கொண்ட, விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகக் கூறினார்.

ராஜீவ்காந்தி மருத்துவமனையில், 20 படுக்கைளோடு தொடங்கப்பட்ட கோவிட் மருத்துவமனை 1000 படுக்கைகளுடன் செயல்பட்டு வருவதாகவும், இன்னும் 1000 படுக்கைகள் கூடுதலாக அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வேறு உபாதைகளுடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தாலும் கொரோனா மரணம் என்று அறிவிப்பதாகவும், எனவே இறப்பு எண்ணிக்கையை கண்டு பயப்படக்கூடாது என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments