டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது

0 756

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

காணொலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் பாதிக்கப்பட்டோரில் 72ஆயிரம் பேர் குணமடைந்துள்ளதாகவும், 25ஆயிரம் பேர் தான் தற்போதைய நோயாளிகளாக உள்ளதால் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

தற்போதைய நோயாளிகளில் 15 ஆயிரம் பேர் அவரவர் வீடுகளிலேயே தங்கித் தனிமைக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஐயாயிரத்து 300 ஆகக் குறைந்துள்ளதால், ஒன்பதாயிரத்துத் தொள்ளாயிரம் படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

டெல்லியில் கொரோனா நோயாளிகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும், நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கி டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments