இந்திய வீரர்கள் நடத்திய பதிலடித் தாக்குதலில் 2 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொலை

0 2165

ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்திய வீரர்கள் நடத்திய பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர்.

பூஞ்ச் மாவட்டம் பாலகோட் பகுதியில் சிறிய ரக குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் தேவேந்திர ஆனந்த் தெரிவித்துள்ளார்.

நிகியால் என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். ராக், சிக்கிரி மற்றும் பக்சார் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த மோதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் படுகாயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments