சீன நிறுவனங்களைப் புறக்கணிக்கும் ஹீரோ சைக்கிள்ஸ்..!

0 11070

ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம், சீன நிறுவனங்களுடனான தொள்ளாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வணிக உடன்பாட்டை முறித்துக் கொண்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் இ சைக்கிள், இ பைக் ஆகியவற்றைத் தயாரிக்கச் சீன நிறுவனங்களிடம் இருந்து உதிரிப்பாகங்களைக் கொள்முதல் செய்து வந்தது. அடுத்த 3 மாதங்களில் தொள்ளாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதிரிப் பாகங்களைச் சீன நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கான ஆர்டர்களை ஏற்கெனவே வழங்கியிருந்தது.

இந்நிலையில் கால்வன் மோதலையடுத்துச் சீன நிறுவனங்களிடம் தொள்ளாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வணிகம் மேற்கொள்ளச் செய்திருந்த உடன்பாடுகளை முறித்துக் கொண்டுள்ளதாக ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத் தலைவர் பங்கஜ் முஞ்சால் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய இருந்த பாகங்களை இனி இந்தியாவிலேயே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments