21 மாநிலங்களில் குணமடைந்தோர் விகிதம் தேசிய சராசரியை விட அதிகம்

0 2825

21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கொரோனாவில் இருந்து குணமடைவோரின்  விகிதம்,  தேசிய சராசரியான 60.77 ஐ விடவும் அதிகமாக உள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவற்றில் சண்டிகர் 85.9 சதவிகிதத்துடனும், லடாக் 82.2 சதவிகிதத்துடனும், உத்தராகண்ட் 80.9 சதவிகிதத்துடனும் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன. இன்றைய நிலவரப்படி, கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 9 ஆயிரத்து 82 ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 14 ஆயிரத்து 856 பேர் வைரஸ் தொற்றில் இருந்து விடுதலை பெற்றுள்ளனர். 6 லட்சத்து 73 ஆயிரத்து 165 பேருக்கு தொற்று பாதித்ததில், 2லட்சத்து 44 ஆயிரத்து 814 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments