வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

0 1716

காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, தேனி ஆகிய 10 மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40லிருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments