மதுரையில் மேலும் 7 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிப்பு

0 10771

மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் முழுஊரடங்கு மேலும் 7 நாட்களுக்கு நீட்டித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் முழு ஊரடங்கு கடந்த 24ஆம் தேதி முதல் நாளை நள்ளிரவு வரை அமலில் உள்ளது.

இந்த முழு ஊரடங்கின்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்திருப்பினும், முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக மதுரை மாவட்டத்தில், இந்த முழு ஊரடங்கினை மேலும் 7 நாட்களுக்கு நீட்டித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், வரும் 6ஆம் தேதி அதிகாலை 12.01 மணி முதல், 12ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கை நீட்டிக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் முழுஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முழுஊரடங்கு காலத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பணிகள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும், கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு, அமல்படுத்தப்படும் காலத்தில் மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதிசெய்யும்.

அரசுஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறுகட்டுப்பாடுகளைவிதித்தாலும், மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்புநல்கினால்தான், நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments