லடாக் மோதல் - இந்தியாவுக்கு பெருகும் உலக நாடுகளின் ஆதரவு

0 8040

லடாக்கில் சீனாவுடனான மோதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவு அதிகரித்து வருகிறது.

இந்திய - சீன எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இயல்பை வெளிப்படுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சீன செல்போன் செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளதை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ வரவேற்றுள்ளார்.

லடாக் விவகாரத்தில் இந்தியாவுக்குத் தனது உறுதியான ஆதரவைத் தெரிவித்துக்கொள்வதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி தெரிவித்துள்ளார். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் முன்பிருந்த நிலையை மாற்ற சீனா ஒருதரப்பாக எடுத்த முயற்சியைக் கண்டிப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

சீனாவும் இந்தியாவும் எல்லைத் தகராறைப் பேசித் தீர்த்துக் கொள்வதை ஊக்குவிப்பதாகவும், வன்முறை யாருக்கும் பயனளிக்காது என்றும் இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments