பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம்

0 2637

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மருத்துவ கல்வி நிறுவனங்களில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு  மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த இட ஒதுக்கீட்டின்கீழ் மத்திய, மாநில அரசுகளின் மருத்துவ கல்வி நிறுவனங்களில் எஸ்சி பிரிவினருக்கு 15 சதவீதமும், எஸ்டி பிரிவினருக்கு 7.5 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதாகவும், ஆனால் அகில இந்திய ஓதுக்கீட்டின் கீழ் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு  மத்திய கல்விநிறுவனங்களோடு நின்று விட்டதாகவும் கூறியுள்ளார்.

இது 93வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மீறும் செயலாகும் என தெரிவித்துள்ள சோனியா, சமத்துவம், சமூக நீதியின் நலன் கருதி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கும் நீடிக்க வேண்டுமென சோனியா வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments