சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை நீட்டிப்பு

0 3926

சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு ஜூலை 31ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 25 முதல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தத் தொடங்கியவுடன் மே 25 முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதேசமயம், சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு ஜூலை 15-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தடை ஜூலை 31 வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வர்த்தக அடிப்படையில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானங்களை இயக்கவும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பயணிகள் விமானங்களை இயக்கவும் தடை நீடிக்கிறது.

சரக்கு போக்குவரத்து விமானங்களுக்கும், விமானப் போக்குவரத்து இயக்ககம் அனுமதிக்கும் சிறப்பு விமானங்களுக்கும் இந்த தடை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments