இந்திய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவும் இல்லை - பிரதமர் மோடி

0 5857

தாய்நாட்டை காப்பதற்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்யத் தயார் என பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார். கால்வான்  எல்லையில் இந்திய வீரர்கள் வெளிக்காட்டிய தீரமும், சீற்றமும், இந்தியாவின் பலத்தை உலகிற்கு உணர்த்துவதாக அமைந்தன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

லடாக் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ஜூன் 15 ஆம் தேதி கால்வன் பள்ளத்தாக்கில் சீனாவின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் உரையாற்றிய அவர், லடாக்கில் இந்தியாவின் எல்லையை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு தலைவணங்குவதாக கூறினார்.

இந்திய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவும் இல்லை என்ற அவர்,ஒட்டு மொத்த இந்திய மக்களின் நம்பிக்கை நமது ராணுவ வீரர்கள் தான் என்றார். கால்வன் பகுதி இந்தியாவிற்கு சொந்தமானது என்பதில் எந்த மாற்றமும் இல்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தாய்நாட்டை காப்பதற்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்யத் தயார் என சூளுரைத்த அவர், இந்திய ராணுவத்திற்கு உலகில் யாரையும் எதிர்கொள்ளும் சக்தி உண்டு என்றார். பாறை போன்ற மன உறுதியுடன் நமது ராணுவ வீரர்கள் எல்லையை காத்து நிற்பதாக அவர் பெருமிதத்துடன் கூறினார். 

உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று இந்தியா விரும்புவதாக குறிப்பிட்ட மோடி, பலவீனமானவர்களால் அதை நிலை நிறுத்த முடியாது என்றார்.

அமைதியை நிலவச் செய்ய வீரமும், தைரியமும் அவசியமானவை என மோடி தெரிவித்தார். இந்திய வீரர்களின் தீரத்தையும், சீற்றத்தையும் இந்தியாவின் எதிரிகள் கண்டுகொண்டனர் என்றார் மோடி. நாடு பிடிக்கும் காலம் என்பது மலையேறிச் சென்றுவிட்டதாக குறிப்பிட்ட மோடி,ஒவ்வொரு நாடும் தற்போது முன்னேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றன என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments