அமெரிக்காவில் ஒரேநாளில் புதிதாக 54,879 பேருக்கு கொரோனா

0 1186

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவாக வியாழனன்று ஒரே நாளில் புதிதாக 54 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் மொத்தம் 28 லட்சத்து 37 ஆயிரத்து 189 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 485 பேர் உயிரிழந்தனர்.   

புளோரிடா மாநிலத்தில் மட்டும் வியாழனன்று ஒரேநாளில் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் வியாழனன்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, பிரேசிலில் ஜூன் 19ஆம் நாள் 54 ஆயிரத்து 771 பேர் பாதிக்கப்பட்டதைவிட அதிகமாகும். அமெரிக்காவின் 37 மாநிலங்களில் கடந்த இரு வாரங்களாகப் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவது குறிப்பிடத் தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments