மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

0 2761

மின் கட்டணம் செலுத்துவதற்கு ஜூலை 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக வாய்ஸ் ஆப் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் ராஜசேகரன் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் 1108 கோடியே 36 லட்சம் ரூபாய் மின்கட்டணம் வசூலிக்க வேண்டியுள்ளது என்றார்.

பெரும்பான்மையினர் மின் கட்டணத்தை செலுத்தி விட்டதாகவும், ஊரடங்கில் மின் இணைப்பு துண்டிக்கவில்லை எனவும் தெரிவித்தார். சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் ஜூலை 15 வரை மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார். 

 இதையடுத்து, ஏற்கனவே 90 சதவீதம் பேர் மின் கட்டணம்  செலுத்தி விட்டதாகக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments