தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

0 15939

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மற்றும் உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் வெப்பசலனம் காரணமாக சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக் கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகடலோர மாவட்டங்கள், கோவை, நாமக்கல், சேலம், நீலகிரி, ஈரோடு, கரூர், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டியிருக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments