மெக்சிகோவில் போதை மறுவாழ்வு மையத்தில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு; 24 பேர் பலி

0 597

மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாநிலத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 24 பேர் உயிரிழந்தனர்.

ராபுவாடோவில் என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ள  குவானாஜுவாடோ அட்டர்னி ஜெனரல் கார்லோஸ் ஜமரிபா, தாக்குதல் குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கடந்த மாதம் 6 ஆம் தேதி, இராபுவாடோவில் உள்ள மற்றொரு போதை மறுவாழ்வு மையத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments