பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா உறுதி

0 3136

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரமக்குடி தொகுதி முழுவதும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்த எம்.எல்.ஏ சதன் பிரபாகரன், ஏற்கனவே 3 முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் 4வது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது மகன், உதவியாளர் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைபடுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ சதன் பிரபாகரன் உள்ளிட்ட மூவருக்கும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments