அறிகுறி இல்லாதவர்களிடம் இருந்து கொரோனா பரவுவது மிகவும் அரிது - WHO

0 8468

அறிகுறி இல்லாதவர்களிடம் இருந்து கொரோனா பரவுவது மிகவும் அரிது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்புக்கு ஆளான சிலருக்கு அறிகுறி இல்லாதது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க அறிகுறி இருப்போர், இல்லாதோர் என அனைவரிடம் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அறிகுறி இல்லாத நபர்களிடம் இருந்து பிறருக்கு கொரோனா பரவுவது மிகவும் அரிது என உலக சுகாதார அமைப்பு தற்போது தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இந்த கருத்தை அடுத்து, இனி அறிகுறி இருப்போரை மட்டும் கண்டறிந்து சோதனை நடத்தி, அவர்களை ஆரம்பகட்டத்திலேயே தனிமைபடுத்துவதன் மூலம் பிறருக்கு பரவாமல்  தடுக்க வழிவகை ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments