சாத்தான்குளம் விவகாரம் - முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை

0 2394

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை துவங்கியுள்ள சிபிசிஐடி போலீசார் தாங்கள் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை ஆவணத்தை கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்து வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட தந்தை, மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ், போலீஸ் விசாரணைக்கு பின் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் பூதாகரமடைந்துள்ள நிலையில் அது குறித்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி சிபிசிஐடி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர். தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை ஆவணம் கோவில்பட்டி நீதிமன்றம் 1ல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments