தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் பதவியேற்பு

0 5590

தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பதவியேற்றுக் கொண்ட ஜெயக்குமார், சட்டத்திற்குட்பட்டு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சாத்தான்குளம் தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், அது தொடர்பான விசாரணையும் தீவிரமடைந்துள்ளது. அதன் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அருண் பாலகோபாலன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டு, புதிய மாவட்ட கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட ஜெயக்குமார் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

அவரிடம் முன்னாள் கண்காணிப்பாளர் அருண் பாலகோபலன் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதிய காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் நல்லுறவை ஏற்படுத்த பாடுபடுவேன் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments