பீகாரில் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க சிறு குச்சி - தேர்தல் ஆணையம் ஆலோசனை

0 765

பீகாரில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க, பல்குச்சி அளவிலான சிறிய குச்சியை வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

நடப்பாண்டு இறுதியில் நடைபெற உள்ள தேர்தலில் கொரோனா முன்னெச்சரிக்கையாக தனிமனித இடைவெளியை பின்பற்றும் நோக்கில், வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க தேர்தல் ஆணையம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், வாக்களிக்கும் இயந்திரங்களை வாக்காளர்கள் நேரடியாக தொடுவதை தவிர்க்கும் நோக்கில், வாக்குச்சாவடிகளுக்கு வரும் பொதுமக்களுக்கு கையுறை வழங்கவும், வாக்களிக்கும் பொத்தானை அழுத்த பல்குச்சி அளவிலான சிறு குச்சியை வழங்கவும், தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments