நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 17ஆயிரத்தை கடந்தது

0 1741

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 18, 653 பேருக்கு கொரோனா உறுதியானதால் அத்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 85 ஆயிரத்து 493ஆக உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட புள்ளி விவரங்களில், மேலும் 507 பேர் கொரோனாவால் பலியானதாகவும், இதனால் அத்தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 17,400ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 2 லட்சத்து 20 ஆயிரத்து 114 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 3 லட்சத்து 47 ஆயிரத்து 979 பேர் குணமாகி இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 74 ஆயிரத்து 761ஆகவும், பலி எண்ணிக்கை 7855ஆக அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்து 167ஆகவும், உயிரிழப்பு ஆயிரத்து 201ஆகவும் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 87ஆயிரத்து 360ஆகவும், பலி எண்ணிக்கை 2742ஆகவும் உயர்ந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments