பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 1 சிஆர்பிஎப் வீரர், கிராமவாசி ஒருவர் பலி

0 1968

ஜம்மு காஷ்மீரில் 3 வயது சிறுவன் கண்முன்னே அவனுடைய உறவினரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

சோபோரில் சிஆர்பிஎப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிவிட்டனர். இந்தத் தாக்குதலில் 1 சிஆர்பிஎப் வீரரும், அங்கிருந்த கிராமவாசி ஒருவரும் பலியாகினர். கிராமவாசியுடன் உடன் வந்திருந்த 3 வயது சிறுவன், அவர் இறந்துவிட்டது தெரியாமல் சடலம் அருகே அமர்ந்திருந்தான்.

இந்த காட்சி தொலைக்காட்சிகளில் வெளியாகி, அனைவரின் நெஞ்சையும் உலுக்கியது. அந்த சிறுவனை பாதுகாப்புப் படையினர் பத்திரமாக மீட்டு, தாயாரிடம் ஒப்படைக்க அழைத்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments