ஜம்மு- காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

0 516

ஜம்மு- காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அனந்த்நாக்கின் வாகாமா பகுதியில் பாதுகாப்புப் படையினர், போலீசார் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்கள் 2 பேரும், சிஆர்பிஎப் வீரர் ஒருவரையும், 5 வயது சிறுவனையும் 3 நாள்களுக்கு முன்பு சுட்டுக் கொன்றவர்கள் எனத் தெரிவித்துள்ள காஷ்மீர் ஐ.ஜி. விஜய்குமார்,  இவர்களையும் சேர்த்து  அனந்த்நாக்கில் 24 மணி நேரத்தில் 5 பயங்கரவாதிகள்  கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை போலீசாரே தலைமை தாங்கி நடத்துவதாகவும் விஜய்குமார் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments