கொரோனாவில் இருந்து குணமடைவோர் சதவிகிதம் 60 ஐ நெருங்குகிறது

0 1082

கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை  60 சதவிகிதத்தை நெருங்கியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்று பாதித்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 125 ஆக உள்ள நிலையில், 3 லட்சத்து 34 ஆயிரத்து 821 பேர் குணமடைந்துள்ளனர்.

இது தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையில் 59.07 சதவிகிதமாகும்.  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 ஆயிரத்து 99 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது 761 அரசு ஆய்வகங்கள், 288 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 1049 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று கடந்த 24 மணி நேரத்தில் 2,10,292 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதாகவும், நாட்டில் இதுவரை 86,08,654 சோதனைகளை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments