பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு - தமிழக அரசு பதில்

0 956

தமிழகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க மூத்த அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த இந்த  இடஒதுக்கீட்டு சட்டத்தின் கீழ் சலுகையைப் பெற சொத்து மற்றும் வருமான சான்றுகள் வழங்க தாசில்தாரர்களுக்கு அதிகாரம் வழங்கி உத்தரவிடப்பட்டது.

இந்த சான்றிதழ்களை தற்போது வழங்க வேண்டாம் என, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடந்த ஜூன் 4 ம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசிடம் எந்தவொரு ஆலோசனையும்  நடத்தாமலேயே மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்ததாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த விவகாரத்தில் விரைவில் கொள்கை முடிவு எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments