10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள சுமார் 37 லட்சம் வழக்குகள்

0 871
நாடு முழுவதும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள 37 லட்சம் வழக்குகள்

நாடு முழுவதும் 37 லட்சம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாக தேசிய நீதிமன்ற தரவு அமைப்பு தெரிவித்துள்ளது.

நிலுவையில் உள்ள வழக்குகளில் மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் 28 லட்சம் வழக்குகளும், உயர் நீதிமன்றங்களுக்கு முன் 9 லட்சத்து 20 ஆயிரம்  வழக்குகளும் விசாரணையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவற்றில், 6 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவும், ஒரு லட்சத்து 31 ஆயிரம் வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாக, தேசிய நீதிமன்ற தரவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments