சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு புதிய ஆய்வாளர் நியமனம்

0 4612

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு புதிய ஆய்வாளராக, வடசேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெர்னாட் சேவியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊரடங்கை மீறி கடை திறந்ததாக கைது செய்யப்பட்ட தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதற்கு காரணமாக கூறப்படும் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்பு பட்டியலிலும், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன்,ரகு கணேஷ் உள்ளிட்ட 4 போலீசார் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் வடசேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெர்னாட் சேவியரை, சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு புதிய ஆய்வாளராக நியமித்து நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவீன் குமார் அபிமன்யு உத்தரவிட்டுள்ளார். அவர் நாளை பொறுப்பு ஏற்றுக் கொள்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments