சென்னையில் ரூ.1,000 நிவாரண நிதி வழங்கும் பணி 90.92 சதவீதம் நிறைவு

0 1166

முழு ஊரடங்கால்  சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி அளிக்கும் பணி 90 புள்ளி 92 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

மொத்தமுள்ளா 21 லட்சத்து 83 ஆயிரம் ரேசன் அட்டைதாரர்களில்   20 லட்சம் 54  ஆயிரம் பேருக்கு  நிவாரணம் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 30ம் தேதி வரை நிவாரண நிதி வழங்கப்படும் நிலையில், அதை பெறாதோர் ரேசன் கடைகளில் பிறகு பொருள்கள் வாங்குகையில் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல்  மதுரையில் நிவாரண நிதி வழங்கும் பணி 41.90 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக தெரிவித்துள்ள அமைச்சர், மதுரையில் மொத்தமுள்ள 5 லட்சத்து 39 ஆயிரம் ரேசன் அட்டைதாரர்களில்  1 லட்சத்து 97 ஆயிரம் அட்டைதாரர்களுக்கு  வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments