'பட்டினியாக கிடப்போம்; துரோகமிழைக்க மாட்டோம் '- ஜமோட்டோவில் சீன முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் பணி விலகல்

0 9628

கடந்த 2008- ம் ஆண்டு ஹரியானாவில் உள்ள கிர்கானை தலைமையிடமாக கொண்டு ஜமோட்டோ நிறுவனம் தொடங்கப்பட்டது. பங்கஜ் சட்டா , திபீந்தர் கோயல் என்ற இருவர் சேர்ந்து ஜமோட்டஇந்த நிறுவனத்தை தொடங்கினர். தற்போது, இந்தியாவின் முன்னணி உணவு சப்ளை நிறுவனமாக ஜமோட்டடோ மாறியுள்ளது.

2018-ம் ஆண்டு இந்த நிறுவனத்தில் சீனாவின் அலிபாபா குழுமத்தின் ஆன்ட் ஃபினான்ஸியல் நிறுவனம் 210 யு.எஸ் டாலர்களை முதலீடு செய்தது. இதன் மூலம் ஜமோட்டோ நிறுவனத்தின் 14,7 சதவிகித பங்குகளையும் ஆன்ட் ஃபினான்ஸியல் நிறுவனம் கையக்ப்படுத்தியது.

லடாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதால், இந்தியாவில் சீன பொருள்களுக்கும் சீன நிறுவனங்களுக்கும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜமோட்டாவில் சீன நிறுவனம் முதலீடு செய்யதற்கும் அந்த நிறுவனத்தின் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜமோட்டோவில் பணி புரிந்து வந்த 60- க்கும் மேற்பட்ட மொத்தமாக பணியிலிருந்து விலகியுள்ளனர். மேலும், தெற்கு கொல்கத்தாவில் பெகலா போலீஸ் நிலையம் அருகே கூடிய ஜமோட்டோ ஊழியர்கள் அந்த நிறுவனத்தின் பெயர் எழுதப்பட்ட பனியன்களையும் தீயிலிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் தீபக் கஞ்சாலி கூறியதாவது, ''நாங்கள் இந்த நிறுவனத்தை புறக்கணிப்பது போல மக்களும் ஜமோட்டாவை புறக்கணிக்க வேண்டும். தேசத்துக்காக பசியுடன் இருக்க நாங்கள் தயார். ஆனால், துரோகமிழைக்க மாட்டோம். நமது பணத்தை பயன்படுத்தியே நமது ராணுவத்தினரை கொல்ல அனுமதிக்கலாமா? இன்று முதல் நாங்கள் 60 பேர் வரை பணியில் இருந்து விலகுகிறோம். ஜமோட்டா ஆப்பை எங்கள் செல்போனிலிருந்தே அழித்து விட்டோம் என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments