வங்கதேசத்தை உருவாக்கியவர்; மெட்ராஸ் ரெஜிமென்டை நேசித்தவர்!- காலத்தை வென்ற ஜெனரல் சாம் மானக்ஷா

0 5576


கடந்த 1971- ம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போரில் , வங்கதேசம் என்ற புதிய நாட்டை 13 நாள்களில் உருவாக்கிய பீல்டு மார்ஷல் ஜெனரல் சாம் மானக்ஷாவின் 12-வது நினைவு தினத்தை முன்னிட்டு வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் மற்றும்  Defence Services Staff College அதிகாரிகள் அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

இந்திய ராணுவத்தில் ஃபீல்டு மார்ஷல் அந்தஸ்தை பெற்றவர்கள் இரண்டே பேர் மட்டுமே. ஒருவர் ஜெனரல் கரியப்பா , மற்றோருவர் ஜெனரல் சாம் மானக்ஷா. 1969 - ம் ஆண்டு இந்திய ராணுவத் தளபதியாக பொறுப்பேற்ற சாம் மானக்ஷாவின் தலைமையில்தான் 1971 - ம் ஆண்டு பாகிஸ்தானுடன் இந்தியா போரிட்டது. முடிவில், வங்கதேசம் என்ற ஒரு புதிய நாடு உருவானது. 1972- ம் ஆண்டு இவருக்கு பத்மவிபூசன் விருது வழங்கப்பட்டது. நாட்டுக்கும் ராணுவத்துக்கும் சாம்மானக்ஷா ஆற்றிய சேவையை பாராட்டி 1973-ம் ஆண்டு ஜனவரி 15- ந் தேதி அவருக்கு பீல்டு மார்ஷல் அந்தஸ்து வழங்கப்பட்டது.

ஓய்வுக்கு பிறகு குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்டில்தான் சாம் மானக்ஷா வசித்தார். மெட்ராஜ் ரெஜிமென்டை மிகவும் நேசித்த காரணத்தினால், தன் கடைசி காலத்தை இங்கேயே அவர் கழித்தார். கடந்த 2008- ம் ஆண்டு ஜூன் 27- ந் தேதி சாம் மானக்ஷா இறந்தார். இன்று அவரின் 12-வது நினைவு தினம் ஆகும்.

பஞ்சாப்பில் உள்ள அம்ரிஸ்தரில் 1914-ம் ஆண்டு ஏப்ரல் 3- ந் தேதி பிறந்த சாம் மானக்ஷா, பார்சி இனத்தைச் சேர்ந்தவர். இந்தியாவின் ஃபீல்டு மார்ஷல் அந்தஸ்தை பெற்ற முதல் ராணுவத் தளபதி ஆவார். 40 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய சாம் மானக்ஷா, இரண்டாவது உலகப் போர், 1947 -இந்தியா -பாகிஸ்தான் போர், 1965 -இந்தியா- சீனா , 1965 -இந்தியா- பாகிஸ்தான் 1971- இந்தியா- பாகிஸ்தான் போர் ஆகிய ஐந்து பெரும் போர்களில் பங்கேற்றவர். 1942-ம் ஆண்டு பர்மாவில் ஜப்பானிய படைகளுடன் போரிட்ட போது, அவரின் உடலில் 9 குண்டுகள் பாய்ந்து அதிசயமாய் உயிர் பிழைத்தவர் சாம் மானக்ஷா. 


சாம்மானக்ஷாவின் நிகைவு தினத்தை முன்னிட்யட Defence Services Staff College கமாண்டன்ட் லெப்டினென்ட் ஜெனரல் ஒய்.வி.கே மோகன், உதகமண்டலத்தில் உள்ள பார்சி ஜோராஸ்ட்ரியன் அமைந்துள்ள சாம் மானக்ஷாவின் கல்லறையில் மரியாதை செலுத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments