பிரதமர் மோடி இன்று வானொலியில் மன் கீ பாத் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகிறார்

0 1726

பிரதமர் மோடி இன்று வானொலியில் மன் கீ பாத் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகிறார். தமது உரையில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து நாட்டு மக்களிடம் அவர் யோசனை கேட்டிருந்தார்.

இன்று காலை 11 மணிக்கு ஆல் இந்தியா ரேடியோவில் மோடி நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துகிறார். கடந்த மே மாதம் 31ம் தேதி மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய மோடி, கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பேசினார்.

நாட்டு மக்கள் அனைவரும் முகக்கவசம் அணியும்படியும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும் மோடி கேட்டுக் கொண்டார். நாடு தழுவிய ஊரடங்கு நூறு நாட்களை எட்டியுள்ள நிலையில், ஜூலை முதல் தேதியில் இருந்து மேலும் தளர்வுகளை பிரதமர் மோடி அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments