சீனாவால் மீண்டும் பதற்றம்.. லடாக் எல்லையில் இந்திய ஏவுகணைகள்..!

0 12249

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சீனப் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், கிழக்கு லடாக் பகுதிக்கு இந்தியா ஏவுகணைகளை அனுப்பியுள்ளது.

கால்வனில் இந்திய - சீனப் படையினர் இடையிலான மோதலையடுத்து இரு நாடுகளும் எல்லையில் படையினரையும் போர்த்தளவாடங்களையும் குவித்து வருகின்றன.

கடந்த சில வாரங்களாகச் சீன ராணுவம் எல்லையில் சுகோய் 30 போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. இவை அடிக்கடி இந்தியப் பகுதிகளுக்கு அருகில் பறந்து செல்கின்றன.

இதனால் சீன விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இந்திய வான்பரப்புக்குள் வந்தால் ஒருசில நொடிகளுக்குள் அவற்றை வீழ்த்துவதற்காகக் கிழக்கு லடாக் பகுதிக்கு இந்தியா ஏவுகணைகளை அனுப்பியுள்ளது. எதிரி நாட்டு விமானங்களைக் கண்டறியும் ராடார், ஏவுகணைகளைச் செலுத்தும் வாகனம் ஆகியவற்றையும் அனுப்பியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments