கொரோனா என்றால் மரணம் என்ற எண்ணத்தில் இருந்து மக்கள் வெளியே வர வேண்டும்

0 4872

தமிழகம் முழுவதும் பரிசோதனைகளின் எண்ணிக்கை நாள்தோறும் 32 ஆயிரமாகவும், சென்னையில் 10 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட சிவாஜி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை அவர் ஆய்வு செய்தார். சென்னையில் உள்ள 39 ஆயிரம் தெருக்களில், 9 ஆயிரத்து 509 தெருக்களில் மட்டுமே தொற்று உள்ளது என்றும், அதிலும் 812 தெருக்களில்தான் 5க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உள்ளது என்றும் அவர் கூறினார்.

தொண்டையில் தொற்று ஏற்படுத்தக் கூடிய இதர வைரஸ் காய்ச்சல் போன்றது தான் கொரோனா எனத் தெரிவித்த ராதாகிருஷ்ணன், கொரோனா என்றால் மரணம் என்ற எண்ணத்தில் இருந்து மக்கள் வெளியே வர வேண்டும் என்றார்.

நோயாளிகளை அழைத்து வர கூடுதல் ஆம்புலன்ஸ் இயக்கவும், தனியார் ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறிய ராதாகிருஷ்ணன், கொரோனா மரணங்களை மறைத்தல் உள்ளிட்ட குளறுபடி செய்யும் தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments