’உறைய வைக்கும் மைனஸ் 30 டிகிரியில் சீன வீரர்கள் மேற்கொள்ளும் கடுமையான பயிற்சி' - வைரலாகும் புகைப்படங்கள்!

0 46162

மைனஸ் 30 டிகிரி வெப்பநிலை நிலவும் பனிப் பிரதேசத்தில் மேலாடை இல்லாமல் சீன ராணுவத்தினர் கடினமாகப் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகியிருக்கிறது.

சீனாவின், மக்கள் விடுதலை ராணுவம் தான் உலகின் மிகப்பெரிய ராணுவம் ஆகும். இந்த ராணுவத்தில் மட்டும் இரண்டு மில்லியன் அளவுக்குப் போர் வீரர்கள் பணிபுரிகிறார்கள். போர் வந்தால் அனைத்து சூழல்களையும் எதிர்கொள்ளும் வகையில் இவர்களுக்குச் சீன அரசு பிரத்யேக பயிற்சி அளிப்பது வழக்கம். கோடைக்கால பயிற்சி, குளிர்காலப் பயிற்சி என்று இரண்டு முறைகளில் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சீனா - ரஷ்யா எல்லையில் உள்ள ஹைஹே ராணுவ தளத்தில் தற்போது குளிர்காலப் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள் சீன ராணுவத்தினர். சீன ராணுவத்தினர் கடினமான முறையில் ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் தற்போது வைரலாகியிருக்கின்றன.

image

குளிர்காலப் பயிற்சியையொட்டி, மேலாடை இல்லாமல் பனி மீது நின்றபடி சீன ராணுவத்தினர் பயிற்சி மேற்கொள்கிறார்கள். அந்தப் பயிற்சியின் போது பனியை அள்ளி உடலில் அப்படியே அப்பிக்கொள்கிறார்கள். எதிரே நிற்பவர்கள் கண்ணுக்குத் தெரியாத அளவுக்குப் பனி விழும் இடத்தில் நின்றுகொண்டு துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள். மைனஸ் 30 டிகிரி வெப்பநிலை நிலவும் பனி பிரதேசத்தில் மேலாடை எதுவும் இல்லாமல் உருண்டு, புரண்டு பயிற்சி மேற்கொள்வதைப் பார்த்தாலே பதைபதைக்கச் செய்கிறது. நெகட்டிவ் டிகிரி வெப்பநிலை நிலவுவதால் அவர்களின் விழிப் படலங்கள் உறைந்து போயிருப்பதையும் பார்க்க முடிகிறது.

image


இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் கடுங்குளிர் நிலவும் மலைப் பிரதேசங்களையே எல்லைகளாகக் கொண்டிருக்கிறது, சீனா. அதனால், பிரச்னை என்று வந்தால் சமாளிக்கும் வகையில் குளிர்காலப் பயிற்சியை ஒவ்வொருவருடமும் தவறாமல் மேற்கொள்கிறார்கள் சீன வீரர்கள்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments