தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பான புகலிடம் - அமெரிக்காவின் ஆண்டு அறிக்கையில் தகவல்

0 1244
இந்தியா, ஆப்கானுக்கு எதிரான தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத இயக்கங்கள் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்காமல் அவற்றை மென்மையாக கையாள்வதாக அமெரிக்காவின் தீவிரவாத ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளுக்குப் பாதுகாப்பான இருப்பிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆப்கானிஸ்தானை குறிவைக்கும் தாலிபன் போன்ற தீவிரவாத இயக்கங்களும் இந்தியாவுக்கு குறிவைக்கும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷே முகமது போன்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களும் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா மற்றும் ஆப்கானுக்கு எதிரான தீவிரவாத இயக்கங்கள் மீது பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஹபீஸ் சயீத் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ள போதும் மசூத் அசார், சாஜித் மீர் போன்ற மும்பைத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் பாகிஸ்தானில் பாதுகாப்பாக இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments