ஏர் பிரான்ஸ் - கே.எல்.எம் விமான நிறுவனத்துக்கு 3.4 பில்லியன் யூரோ நிதியுதவி

0 921

பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து அரசுகள் இணைந்து நடத்தும், Air France - KLM விமான நிறுவனத்தை, நிதி நெருக்கடியில் இருந்து மீட்க நெதர்லாந்து அரசு 3.4 பில்லியன் யூரோக்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 28,845 கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்ளது.

இரு நாட்டு அரசுகளும் அந்நிறுவனத்தில் 14 சதவீத பங்குகளை வைத்துள்ள நிலையில், விமான நிறுவனத்தை நிர்வாகிப்பதில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் நிலவி வந்தது.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், அந்நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க பிரான்ஸ் அரசு 7 பில்லியன் யூரோக்கள் வழங்கியது.

இதையடுத்து, France அதிபர் Emmanuel Macron-னுக்கும் நெதர்லாந்து பிரதமருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையின் போது இது குறித்து விவாதிக்கப்பட்டு, தற்போது நெதர்லாந்து அரசு, Air France - KLM விமான நிறுவனத்துக்கு 3.4 பில்லியன் யூரோக்கள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments