தேசிய அளவில் கவனம் பெறும் சாத்தான்குளம் சம்பவம்; ஷிகர் தவான் கடும் கண்டனம்!

0 9446

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இரு வியாபாரிகள் போலீஸ் கஸ்டடியில் இறந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வியாபாரிகளைத் தாக்கியதாகச் சொல்லப்படும் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் பாலகிருஷ்ணன் பணிபுரிந்த போது பல குற்றச்சாட்டுக்குள்ளானதால், பணகுடிக்கு மாற்றப்பட்டுள்ளார். இங்கும், மணல் கடத்தும் கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளார்.

இது குறித்து புகார் எழுந்தது. போலீஸ் நிலையத்துக்கு புகாரளிக்க வந்த பெண்ணிடத்தில் வாட்ஸப்பில் தவறாக பேசி பிரச்னையில் சிக்கியுள்ளார். பிறகு, அங்கிருந்து சாத்தான்குளத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த பாலகிருஷ்ணனும் மற்றோரு சப் இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் ஆகியோர் சேர்ந்து ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸைக் கடுமையாகத் தாக்கியதால் உயிரிழந்ததாகப் புகார் எழுந்துள்ளது.

கடந்த 15 நாள்களுக்கு பேய்குளத்தில் முன்பு கடன் விவகாரத்தில் தொடர்புடைய ஒருவரின் சகோதரரை இந்த இரு சப்இன்ஸ்பெக்டர்களும் சாத்தான்குளம் ஸ்டஷனுக்கு கொண்டு வந்துள்ளனர். ஸ்டேஷனில் அவரைக் கடுமையாக தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அந்த நபர் வீட்டுக்கு வந்த அடுத்த நாளே இறந்து போயிருக்கிறார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 40 பேர் வரை இதே போல கடுமையாக தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாத்தான்குளம் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயம் ரவி ட்விட் செய்திருந்தார். இந்த நிலையில், சாத்தான்குளம் சம்பவம் தேசிய அளவிலும் கவனத்தை பெற்றுள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகன் தவானும் தன் ட்விட்டர் பக்கத்தில் சாத்தான்குளம் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ''ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு நடந்த கொடூரம் வேதனையை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி வேண்டும். இது போன்ற சம்பவத்துக்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்'' என்று தவான் தெரிவித்துள்ளார்.

மேலும், #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேக்கையும் ஷிகர் தவான் டேக் செய்துள்ளார். சாத்தான்குளம் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் ட்விட்டரில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments