மூளையை தாக்கும் கொரோனா.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..!

0 4861

பிரிட்டனில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் 125 கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வுகளில், கொரோனா வைரஸ் மூளை உள்ளிட்ட நரம்பு மண்டலத்தை கடுமையாக தாக்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவ இதழான தி லான்செட் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் மூளையை தாக்குவதால், பக்கவாதம், மூளைவீக்கம். சைக்கோசிஸ், டிமென்ஷியா உள்ளிட்ட விளைவுகள் ஏற்படுவதாக இந்த ஆய்வை நடத்திய லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரி பேராசியர்கள் தெரிவித்ததாக லான்செட் கூறியுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படும் நரம்பியல் பாதிப்புகள் குறித்து விரிவாக நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள், சிகிச்சை விதிகளில் தேவையான மாற்றங்களை செய்ய உதவும் என ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் சாரா பெட் (Sarah Pett) தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments