ஜம்மு-காஷ்மீரில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

0 1544

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சோபோர் பகுதியிலுள்ள ஹார்ட்சிவா  எனுமிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் தொடுக்கவே, பாதுகாப்புப் படையினரும் திருப்பி பதிலடி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது.

இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments